உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மக்களின் பாரம்பரியம்; படகு இல்ல சுவர்களில் தத்ரூப ஓவியம்

நீலகிரி மக்களின் பாரம்பரியம்; படகு இல்ல சுவர்களில் தத்ரூப ஓவியம்

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் படகு இல்ல சுவர்களில், நீலகிரி மக்களின் கலாசார பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் தத்ரூப ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு உட்பட்ட வெலிங்டன் படகு இல்ல ஏரிக்கு, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சமீபத்தில் படகு இல்ல ஏரி பொலிவு படுத்தும் பணிகள் நடந்தது. அதில், நீலகிரி மக்களின் கலாசார வாழ்வாதார பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தத்ரூப ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில், குரும்பர், பணியர், கோத்தர், தோடர் உட்பட பல்வேறு மக்களின் பாரம்பரிய உடைகள், கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும் ஓவியங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இப்பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி, மற்றும் போட்டோ எடுத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி