உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு போராடும் கிராம மக்கள்

இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு போராடும் கிராம மக்கள்

பந்தலுார் : பந்தலுாரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நத்தம் மற்றும் இந்திரா நகர் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், நடைபாதை, சாலை, தெருவிளக்கு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த பயனும் கிடைக்கவில்லை.இதனால், நொந்து போன கிராம மக்கள், கம்யூ., கிளை செயலாளர் மணிகண்டன் தலைமையில் கிராமத்திலிருந்து ஊர்வலமாக வந்து, பந்தலுார் பஜாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அசைன் வரவேற்றார். நிர்வாகிகள் ரமேஷ், வர்கீஸ், ரவிக்குமார் ஆகியோர், கிராமங்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினர்.தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள், கமிஷனர் முனியப்பனிடம் கோரிக்கை மனு அளித்தனர். கமிஷனர் கூறுகையில், 'இந்திரா நகர் கிராமத்தில் ஒரு சாலை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, நத்தம் பகுதிக்கு செல்லும் சாலை நகராட்சி சாலையாக சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கும் நிதி பெற்று சாலை சீரமைத்து தரப்படும்,' என்றார். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். நிர்வாகி பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !