மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, இந்திரா நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.இந்த பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், சாலை, நடைபாதை உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி, இப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை, வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை.இதனால், அதிருப்தியடைந்த மக்கள் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பஜாரில் இருந்து, ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் தலைமையில், ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி தலைவர் சிவகாமி முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், எம்.ஜி.ஆர்., நகரில் தனிநபர், கழிவு நீர் கால்வாயினை மூடியதால், கழிவு நீர் கிணற்றில் கலந்து, பாதிப்பு ஏற்படுத்துவதாக கிராம மக்கள் தண்ணீருடன் வந்து புகார் கொடுத்தனர்.'இந்திரா நகர்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், நடைபாதை வசதிகள் விரைவில் ஏற்படுத்தவும், கழிவு நீர் கால்வாய் பிரச்னை, 2 நாளில் தீர்வு காணப்படும்,' என, ஆணையாளர் உறுதியளித்தார்.மேலும், மக்கள் தங்கள் குறைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடி தீர்வு காண்பதாக ஆணையாளர் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர். கவுன்சிலர் ரமேஷ், நிர்வாகிகள் ரவிக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025