மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீர்
30-Jun-2025
கூடலுார்; கூடலுாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்கள் அகற்ற நடவடிக்கை இல்லை. இதனால், வாகனங்களை இயக்கவும் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. வளைவான பகுதிகளில் விபத்துகள் ஆபத்தும் உள்ளது. மேலும், மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் ஓடும் போது, சாலையோரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது.கோழிப்பாலம் அருகே, தனியார் இடத்திலிருந்து வரும் மழை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இப்பகுதியில், கால்வாய் வசதியும் இல்லை. இதனால், சாலையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடையும் நிலை உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் ஏற்பட்டு வரும் மண்ணரிப்பை தடுக்க வேண்டும்ஓட்டுனர்கள் கூறுகையில்,'கூடலுார் முக்கிய சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள செடிகள் முட்புதர்களால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வழிந்தோட கால்வாய் வசதியில்லாததால், சாலையோரம் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது. அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, சாலையோர மண்ணரிப்பை தடுக்க வேண்டும்,' என்றனர்.
30-Jun-2025