மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
8 hour(s) ago
கேரளாவில் பறவை காய்ச்சல்: வாகனங்களுக்கு கிருமி நாசினி
8 hour(s) ago
பேட்டரி காருக்கு கவுண்டரில் டிக்கெட் வழங்க கோரிக்கை
8 hour(s) ago
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஊட்டி பழைய கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கலெக்டரை சந்திக்க வருவது வழக்கம். அதே போல், பிற நாட்களிலும் பொதுமக்கள் கலெக்டரை சந்திக்க வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வளாகத்தில் உள்ள பூங்காவில் நிழலுக்கு ஒதுங்கி அமர்ந்தாலும், வெயில் மற்றும் மழை சமயங்களில் பொதுமக்கள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர். கலெக்டர் நேரடி ஆய்வு செய்து போதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago