உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே இந்திரா நகரில் குடிநீர் வினியோகம் இல்லை; விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் மக்கள்

பந்தலுார் அருகே இந்திரா நகரில் குடிநீர் வினியோகம் இல்லை; விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் மக்கள்

பந்தலுார் : பந்தலுார் பஜாரை ஒட்டி இந்திரா நகர் கிராமம் அமைந்துள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில், பெரும்பாலான நாட்களில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் சில குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டு உள்ளது. தண்ணீருக்கு வரி செலுத்தி வரும் இப்பகுதி மக்கள், இது குறித்து நகராட்சியில் தெரிவித்தும் பயனில்லை.இதனால், மக்கள் வேறு பகுதிகளுக்கு சென்று, விலை கொடுத்து வாகனங்களில் எடுத்து வந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கண்ணன் என்பவர் கூறுகையில், ''நகராட்சி குடிநீர் பணியாளர்களிடம் பிரச்னை குறித்து புகார் கூறினாலும், 'நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடுங்கள்; எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தான் அதனை சீராக்குவோம்,' என்ற பதிலை கூறுகின்றனர். இதனால், வேறு வழியின்றி குடிநீரை விலைக்கு கொடுத்து வாங்கி வருகிறோம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கமிஷனர் முனியப்பன் கூறுகையில், ''இது குறித்து புகார் வந்துள்ளது. பணியாளர்கள் மூலம் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ