ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
ஊட்டி : ஊட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி2வது சனிக்கிழமையை முன்னிட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.ஊட்டி மார்க்கெட் அருகே உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் துவக்கம் முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சென்னை, ஈரோடு, கோயம்புத்துார், நீலகிரி பகுதிகளை சேர்ந்த விஷ்வாஸ் குழுவினரின் விஷ்னு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி நடந்தது.மாலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.திருவீதி உலா, மணிகூண்டு, லோயர்பஜார், மத்திய பஸ்நிலையம், மெயின்பஜார், காபி ஹவுஸ் சதுக்கம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.