உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காருடன் ஆற்றில் சிக்கிய மூவர் மீட்பு

காருடன் ஆற்றில் சிக்கிய மூவர் மீட்பு

கூடலுார் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார், அதில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவாலா, பந்தலுார் பகுதிகளில் தொடரும் மழையால், இங்கு உற்பத்தியாகும் பாண்டியார், புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கூடலுார் ஓவேலி வனச்சரகத்தில் தற்காலிக யானை விரட்டும் காவலராக பாணியாற்றி வரும் ராஜேஷ், 47, நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்து, விடுமுறை பெற்றார். கேரள மாநிலம், மஞ்சேரியை சேர்ந்த நண்பர்கள் ஹாண்ரோ தாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், வாகனத்தில் ஓவேலி சென்றுள்ளார்.அங்கிருந்து இரவு, 11:00 மணிக்கு, அண்ணா நகர் - தர்மகிரி சாலை வழியாக, கூடலுார் நோக்கி அனைவரும் வந்தனர். இச்சாலையின் குறுக்கே செல்லும் பாண்டியார் ஆற்றை கடக்க முயன்ற போது, கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. தப்பி வர வழியின்றி தவித்த மூவரும், வாகனத்தின் மீது ஏறி நின்று சப்தமிட்டனர். கூடலுார் தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக நியூஹோப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை