குளம் போல் தேங்கிய மழை நீர்; மூன்று மாநில வாகனங்கள் திணறல்
கூடலுார் ;கூடலுாரில் பெய்த மழையில், செம்பாலா அருகே சேதமடைந்த கோழிக்கோடு சாலையில், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது.கூடலுார் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இரு நாட்களாக பெய்து வரும் மழையால், கோழிக்கோடு சாலை, செம்பாலா பகுதியில் சேதமடைந்த சாலையில், மழைநீர் குளம் போல் தேங்கி, சாலை மேலும் சேதமடைந்தது. அப்பகுதியை கடந்து செல்ல தமிழக, கேரளா, கர்நாடக வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் மூன்று மாநில வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்பகுதி சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், அனைத்து பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இத்தகைய முக்கியமான சாலையை தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.