உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரை குலுக்கிய இடி, மழை; மலைப்பாதையில் தொடர் மண்சரிவு

குன்னுாரை குலுக்கிய இடி, மழை; மலைப்பாதையில் தொடர் மண்சரிவு

குன்னுார், ; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதுடன் சாலையில் பிளவும் ஏற்பட்டுள்ளது.குன்னுார் பகுதிகளில் கடந்த, 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள், பாறைகள் விழுவதுடன் மண் சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்து வருகிறது. நேற்று அதிகாலை ஒரு மணி வரை பலத்த இடியுடன் கன மழை பெய்தது. பாலவாசி, மவுன்ட் பிளசன்ட் சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களிலும் ஏற்பட்ட மண்சரிவுகளை நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர். பர்லியார் அருகே சாலையில் பிளவு ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைதுறையினர் தடுப்பு பணி மேற்கொள்ளாததால், பிளவு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது.பயணிகள் கூறுகையில்,' இப்பகுதியில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ