மேலும் செய்திகள்
அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
01-Nov-2025
பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில், அஷ்ரப் பெயர் கொண்ட நண்பர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. எதிர்காடு தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அஜூலாஅஸ்ரப் வரவேற்றார். பந்தலூர் வியாபாரிகள் சங்க தலைவர் தலைமை வகித்து பேசுகையில், கேரளா மாநிலத்தில் அஷ்ரப் என்ற பெயர் கொண்ட பத்தாயிரம் பேரை, ஒன்றிணைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இந்த குழு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் முதல் முறையாக, இந்த சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. சாதி, மதங்கள் பேதமின்றி அனைவருக்கும், மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து, பிரச்சனைகளுக்கும் கை கொடுக்கும் அமைப்பாக இது செயல்படும். தனிநபராக உதவ முடியாது என்பதால், இந்த குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இந்த குழுவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மஞ்சேரி அஷ்ரப், செஞ்சுரி அஷ்ரப், குஞ்சிப்பா அஷ்ரப், சேரம்பாடி அஷ்ரப், பாலவாடி அஷ்ரப், முசிலியார்கள் முதல் மைல் அஷ்ரப், வி.பி.அஷ்ரப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த முயற்சி அனைவரும் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
01-Nov-2025