உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை ஏலத்தில் ரூ. 43.47 கோடி மொத்த வருவாய் மூன்று வாரங்களில் இரு மடங்கு உயர்வு

தேயிலை ஏலத்தில் ரூ. 43.47 கோடி மொத்த வருவாய் மூன்று வாரங்களில் இரு மடங்கு உயர்வு

குன்னுார்,; தென் மாநில தேயிலை ஏலங்களில், 43.47 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. நீலகிரி மாவட்டம் குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 20வது ஏலத்தில், '19.45 லட்சம் கிலோ இலை ரகம்; 5.41 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 24.86 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '13.47 லட்சம் கிலோ இலை ரகம்; 4.19 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.66 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 1.39 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. விற்பனையில், ஒரு லட்சம் கிலோ அதிகரித்தது. 71 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 109.89 ரூபாய் என இருந்தது; சராசரி விலையில் 5 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 19.41 கோடி ரூபாய் கிடைத்தது.

'டீசர்வ் ஏலம்'

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 20வது ஏலத்திற்கு, 1.70 லட்சம் கிலோ வந்தது. 1.34 லட்சம் கிலோ விற்பனையானது. 27 ஆயிரம் கிலோ வரத்து குறைந்தது; இது வரை இல்லாத அளவு ஒரே வாரத்தில், சராசரி விலையில், கிலோவிற்கு, 10 ரூபாய் வீழ்ச்சி கண்டது. 1.26 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. மற்ற ஏலங்களில், 100 ரூபாய்க்கு மேல் சராசரி விலை உள்ள நிலையில், 'இன்கோ'வில் மட்டும், 94.13 ரூபாய் என மிகவும் குறைவாக இருந்தது. கோவை ஏல மையத்தில் நடப்பு ஏலத்தில், 5.52 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 4.45 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 128.14 ரூபாய் என இருந்தது. கிலோவிற்கு, 6 ரூபாய் குறைந்தது. 5.70 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. மொத்த வருமானத்தில் கடந்த ஏலத்தை விட, 50 லட்சம் ரூபாய் உயர்ந்தது.கொச்சி ஏல மையத்தில், 12.38 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 10.57 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை,161.79 ரூபாய் என இருந்தது. 17.10 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. தென் மாநிலங்களில் நடந்த, 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 43.47 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 1.15 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது.கடந்த, 3 வாரங்களில் மொத்த வருவாய், 20.02 கோடி ரூபாய் அதிகரித்து, பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுத்த போதும், சராசரி விலை தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வருகிறது. இதனால் இம் மாத பசுந்தேயிலை விலை நிர்ணயத்தில். விலை சரிவு ஏற்படும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி