மாநில எல்லைகளில் சுற்றுலா வாகன சோதனை
பந்தலுார்: தமிழக எல்லையோர சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான, சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு நாட்களாக வந்து செல்கின்றனர். அதிக வாகனங்களும் வந்து செல்லும் நிலையில்,'போதை பொருட்கள் கடத்தல் மற்றும் வெடி மருந்து பொருட்கள் கடத்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்,' உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளா மாநிலத்திலிருந்து தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும், முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு, வாகனங்களின் டிரைவர்களின் பெயர், முகவரி மற்றும் லைசன்ஸ் நம்பர், மொபைல் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.