உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரத்தில் ஓய்வெடுத்த பாறு கழுகுகள் ரசித்த சுற்றுலா பயணிகள்

மரத்தில் ஓய்வெடுத்த பாறு கழுகுகள் ரசித்த சுற்றுலா பயணிகள்

கூடலூர்: முதுமலை, மசினகுடி -மாவனல்லா சாலையோர மரத்தில், 10க்கும் மேற்பட்ட பாறு கழுகுகளை பார்த்து சுற்றுலா பயணிகள் வியந்தனர். அழிவின் விளிம்பில் உள்ள பாறு கழுகுகள், நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் வனப் பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் காணப்படுகிறது. அடர்ந்த வனப் பகுதிகளில் காணப்படும் இவைகள், அவ்வப்போது வானத்தில் வட்டமிடுவதை, பார்க்க முடியும். இந்நிலையில், நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி - மாவனல்லா சாலையோரத்தில், நேற்று 10க்கும் மேற்பட்ட பாறு கழுகுகள் ஒரே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது. இக்காட்சியை, அவ்வழியாக சென்ற உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் ரசித்து, ஆர்வத்துடன் படம் எடுத்துச் சென்றனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஒரு மரத்தில் கூட்டமாக பாறு கழுகுகளை பார்ப்பது, வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படும் இதனை, பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !