உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மானை விழுங்கிய மலைப்பாம்பு சுற்றுலா பயணிகள் வியப்பு

மானை விழுங்கிய மலைப்பாம்பு சுற்றுலா பயணிகள் வியப்பு

பந்தலுார்:கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில், மலைப்பாம்பு புள்ளி மானை விழுங்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வியக்க செய்தது. நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியான, பந்தலுாரை ஒட்டி, கேரளா மாநிலம் தோல்பட்டி வனப்பகுதி உள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா வனப்பகுதிகளை இணைக்கும் இந்த பகுதியில், யானை, புலி, சிறுத்தைகள், காட்டெருமை, பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், நேற்று இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள்சென்ற போது சாலையோர வனத்தில் புள்ளிமான் ஒன்றை மலைப்பாம்பு விழுங்கும் காட்சியை பார்த்துள்ளனர். இந்த காட்சியை, சுற்றுலா பயணிகள் 'வீடியோ' எடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை ஓர வனப்பகுதியில் மலைப்பாம்பு இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை