மேலும் செய்திகள்
விடுமுறையால் மூணாறுக்கு பயணியர் வருகை அதிகரிப்பு
18-Sep-2024
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். குறிப்பாக, தாவரவியில் பூங்காவை பார்வையிட அதிகளவில் சுற்றுலா பயணியர் வருவதால், பூங்காவில் இரண்டாவது சீசனை ஒட்டி, 4 லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளி விடுமுறை, காந்தி ஜெயந்தி விடுமுறை காரணமாக, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு போட்டோ மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இதே போன்று, ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்ட காட்சி முனை உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.
18-Sep-2024