உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்; வளர்ப்பு யானைகளை கண்டு மகிழ்ச்சி

முதுமலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்; வளர்ப்பு யானைகளை கண்டு மகிழ்ச்சி

கூடலுார்; தொடர் விடுமுறை காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம்; தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர், வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்கு சவாரி அழைத்து சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.தற்போது, மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதையும் வெகுவாக ரசித்து சென்றனர். பயணிகள் வருகை காரணமாக, மாலை நேரத்தில் தெப்பக்காடு பகுதியில் ஏற்பட்ட வாகன நெரிசலை போலீசார் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை