யானைகள் முகாமில் திரண்ட சுற்றுலா பயணிகள்
கூடலுார்; பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.நடப்பாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், கடந்த ஒரு வாரமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். வனப்பகுதியில் வாகன சவாரி சென்று வரவும், தெப்பக்காடு யானைகள் முகாமல், வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் காட்சி பார்ப்பதற்காக ஆர்வம் காட்டினர். வளர்ப்பு யானைகள் முகாமில்,'போட்டோ' எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.