உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கனமழையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கனமழையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி : கோத்தகிரியில் பெய்து வரும் கன மழையில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்கள் விழுந்து, லேசான மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.நெடுஞ்சாலை துறை மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசாருடன் இணைந்து, மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கக்குச்சி பகுதியில், பெரிய மரம் வேரோடு சாலையில் விழுந்தது. இதனால், அஜ்ஜூர், கக்குச்சி மற்றும் கூக்கல்தொரை வழித்தடத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோத்தகிரி தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை அகற்றியதை அடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த போக்குவரத்து பாதிப்பு சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை