அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கோத்தகிரி, ; கோத்தகிரி கப்பட்டி கிராமத்தில், தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 'அட்மா' திட்டத்தின் கீழ், தரமான விதைகள் உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரவீனா வரவேற்றார்.இதில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், அங்கக மேலாண்மையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.ஊட்டி அறிவியல் நிலைய மேலாண்மை விஞ்ஞானி தேன்மொழி, 'மண் வளத்தின் முக்கியத்துவம், தரமான விதைகள் உற்பத்தியின் தொழில்நுட்பம்,' குறித்து விளக்கம் அளித்தார்.இதில், ஊட்டி உழவர் பயிற்சி நிலைய தோட்டக்கலை அலுவலர் மேனகா 'அட்மா' திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாத் உட்பட, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.விதை மேலாண்மை உட்பட, பயிர் சம்பந்தமாக, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் நன்றி கூறினர்.