உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி

 தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி

கூடலுார்: முதுமலையில், புலிகள் கணக்கெடுப்பு பணியில், தானியங்கி கேமராக்கள் பொருத்துவது குறித்து வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில், தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான, தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி இன்று துவங்க உள்ளது. இதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலக்கோட்டை வனச்சரகங்களில், 40 இடங்களில் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தி கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் தெப்பக்காடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று, நடந்தது. முகாமுக்கு கார்குடி வனச்சரகர் சிவக்குமார் தலைமை வகித்தார். வனச்சரகர்கள் பாஸ்கரன் (முதுமலை), சீனிவாசன் (நெலாக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில், 'தானியங்கி கேமரா செயல்பாடுகள், கேமராக்களை வனப்பகுதிகளில் பொருத்தி அதன், செயல்பாடுகளை கண்காணிப்பது குறித்து முன்களப் பணியாளர்களுக்கு உயிரியலாளர்கள் பழனிச்சாமி, நவீன் ஆகியோர் செயல்விளக்க பயிற்சி அளித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்துவது குறித்து வன ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கேமராக்கள் பொருத்தும் பணி நாளை (இன்று) துவங்கி, 5 நாட்கள் நடைபெறும். தொடர்ந்து தானியங்கி கேமராக்கள் மூலம், 30 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். அதில், பதிவாகும் புலிகள் படங்களின் அடிப்படையில் புலிகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்,' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி