உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விடுதி அறைகளுக்கு செலவு செய்யும் நகராட்சி; அடிப்படை பணிகள் இல்லாததால் பயணிகள் பரிதவிப்பு

விடுதி அறைகளுக்கு செலவு செய்யும் நகராட்சி; அடிப்படை பணிகள் இல்லாததால் பயணிகள் பரிதவிப்பு

குன்னுார், ;குன்னுாரில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் நகராட்சி, பயணிகளுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்ளவில்லை.குன்னுார் பஸ் ஸ்டாண்டில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. பயணிகளுக்கான அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் தராத நகராட்சி, இங்குள்ள விடுதி அறைகள் பொலிவு படுத்தப்பட்டு வருகிறது. அதில், விடுதி பணிகள் முடித்து, ஆளும்கட்சியினர் எடுத்து நடத்த தீவிரம் காட்டுகின்றன.ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் அமர இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தராமல் உள்ளதால், பயணிகள் தரையில் அமரும் அவலம் நீடிக்கிறது. ஏற்கனவே இருந்த பழமையான ஓரிரு இருக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. இங்கு பஸ்கள் நிறுத்தும் இடத்தில், டயர்களுக்கான சிமென்ட் தடுப்புகள் உடைந்துள்ளது. இதில் இரும்பு கம்பிகள் பெயர்ந்து வெளியில் காணப்படுகிறது. இங்கு வரும் பயணிகளின் கால்களை இந்த கம்பிகள் பதம் பார்த்து விடுவதால் காயமடைகின்றனர். இங்கு வந்த பெண் பயணி ஒருவரின் சேலை சிக்கி விழுந்தது காயமடைந்தார்.பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல முறை புகார்கள் தெரிவித்தும், கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள், அங்குள்ள விடுதி அறைகளுக்கு மட்டும் முக்கியத்துவமாக எடுத்து பணிகளை மேற்கொள்கின்றனர்.எனவே, இது போன்று பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களை சீரமைப்பதுடன், உடனடியாக இருக்கைகள் அமைக்க வேண்டும்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி