உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையின் குறுக்கே மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

சாலையின் குறுக்கே மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரங்கோடு- கொளப்பள்ளி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்கம்பம் உடைந்தது. பந்தலுார் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை முதல் லேசான காற்று மற்றும் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், சேரங்கோடு பகுதியில் இருந்து சின்கோனா, படைச்சேரி வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்று, அடியோடு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பம் உடைந்தது. தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மின் வாரிய பணியாளர்கள் புதிய மின் கம்பம் நட்டு மின் சப்ளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி