மேலும் செய்திகள்
மலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
30-May-2025
ஊட்டி; ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த மாதத்தில் இரு வாரங்கள் காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சில பகுதிகளில் வீடுகள் சேதமானது. கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்த நிலையில், பகல் நேரங்களில் வெயில் தென்பட்டது. மழை ஓய்ந்தபின் சில இடங்களில் அவ்வப்போது மரங்கள் விழுந்து வருகிறது.நேற்று, ஊட்டி- மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் கற்பூர மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. பிரதான சாலை என்பதால் வாகனங்கள் இருபுறம் அணிவகுத்து நின்றது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில், தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று பவர்ஷா உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
30-May-2025