உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அனுமதி இன்றி மலையேற்றம்: இருவருக்கு அபராதம்

அனுமதி இன்றி மலையேற்றம்: இருவருக்கு அபராதம்

கூடலுார் : முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் மலையேற்ற பயணத்துக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.முதுமலை, மசினகுடி அருகே உள்ள சிறியூர் மாரியம்மன் கோவில் இரண்டு நாள் திருவிழா நேற்று, துவங்கியது. இதனை பயன்படுத்தி சிலர், சுற்றுலா பயணிகளை மலையேற்றம் அழைத்து செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையில் வன ஊழியர்கள் நேற்று காலை கூக்கல்தொறை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சிலர் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஐந்து பேர், அவ்வழியாக சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதாக தெரிவித்தனர்.ஆனால், அவர்களுடன் வந்த திலீப் சீனிவாசன்,46, கோத்தகிரி கண்ணன்,42, ஆகியோரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.அதில், 'அவர்கள் இருவரும், கோவில் திருவிழாவை பயன்படுத்தி, மலையேற்றம் தொடர்பாக, 'வாட்ஸ் ஆப்' குரூப் துவங்கி, சுற்றுலா பயணிகளை சேர்த்து மலையேற்றம் அழைத்து செல்ல முயன்றது தெரியவந்தது.மசினகுடி துணை இயக்குனர் உத்தரவுபடி, இருவருக்கும் தலா, 5000 ரூபாய் வீதம், மொத்தம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகை செலுத்தியதை தொடர்ந்து அவர்களை, வனத்துறையினர் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி