உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினரின் காதோலை: பாதுகாக்க பயிற்சி

பழங்குடியினரின் காதோலை: பாதுகாக்க பயிற்சி

கூடலுார் : கூடலுாரில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினரின் காதோலையை, இளைய தலைமுறையினர் உருவாக்கி பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.கூடலுார் பகுதி பூர்வ குடிகளான பணியர், குரும்பர், காட்டுநாய்க்கர் இன பழங்குடி மக்கள் வனம் சார்ந்த குக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் உணவு, காதணிகள், உடைகள் அணிவதில் பாரம்பரியத்தை பின்பற்றி வந்தனர். நாகரீக மாற்றத்தால் இளைய தலைமுறையினர், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி வருவதால், அவர்களின் பாரம்பரியமான அடையாளங்கள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.அதில், முக்கியமாக தனித்துவமான காதோலை முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்குடி பெண்கள், வனங்களில் கிடைக்கும் தாளம்செடி இலையை பறித்து அதனை பதப்படுத்தி, வட்ட வடிவில் சுருட்டி, அதன் உட்பகுதியில் தேன் ராட்டை நிரப்பி, அதன் மேல் சிவப்பு கருகமணி பதித்து காதோலை தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் அளவு காதுகளின் துளைக்கு ஏற்ப மாறுபடும்.இன்றைய தலைமுறையினர் காதோலையை தவிர்த்து, கடைகளில் கிடைக்கும் காதணிகளை அணிய துவங்கி உள்ளனர். இதனால் இன்னும் சில ஆண்டுகளில், இவர்களின் அடையாளமான காதோலைகள் அழிந்து காட்சி பொருளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க, காதோலை உருவாக்குவது குறித்து, இளைய தலைமுறைக்கு பயிற்சி அளிக்கும் பணியில், தனியார் அறக்கட்டளை இயக்குனர் வர்ஷா ஈடுபட்டுள்ளார். அவர் கூறுகையில், 'பழங்குடியினர் கலாசாரம், பாரம்பரியமான கலைப் பொருட்களை பாதுகாக்கும் முயற்சி முன்னெடுத்து வருகிறோம். தனித்துவமான காதோலை உருவாக்கி பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளித்து. அதனை பாதுகாக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி