உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தைலம் உற்பத்தியில் பழங்குடியினர் ஆர்வம்

தைலம் உற்பத்தியில் பழங்குடியினர் ஆர்வம்

கூடலுார்: கூடலுார் ஜீன்பூல் தாவரம் மையத்தில் தைலம் உற்பத்தியில் பழங்குடி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், பழங்குடியினர் உள்ளிட்ட இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், தனியார் பங்களிப்புடன், தைலம் உற்பத்தி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த, 10ம் தேதி முதல் செயல்பட துவங்கியுள்ளது. இப்பணியில் பழங்குடியினர் இளைஞர்கள், பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மையத்தில் கிடைக்கும், தைல புற்களை சேகரித்து, அதிலிருந்து தரமான தைலம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் பழங்குடியினர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'ஜீன்பூல் சுழல் சுற்றுலா தாவரம் மையத்தில், சுற்றுலாவை மேம்படுத்தவும் பழங்குடியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, தைலம் உற்பத்தி மையம் துவங்கி செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் பழங்குடியினர் உள்ளிட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை