மேலும் செய்திகள்
போதை மாத்திரையுடன் இளைஞர் கைது
13-Mar-2025
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் வினோத். இவர், மா.கம்யூ., கட்சியில் இளைஞர் அணி வட்டார தலைவராக உள்ளார். இவர், கடந்த 14ம் தேதி காலை பாலக்காடு டவுன் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்தார். போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்திய இவரது பைக் திருட்டு போனது.இதையடுத்து, வினோத் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, ஆளும்கட்சி பிரமுகரின் பைக் திருட்டு போனதால், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்கான், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்யப்பட்டது.கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள், அந்த நேரத்தில் அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்த மொபைல்போன் நம்பர்கள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில், தமிழகம் திருச்சி லால்குடி மேற்குத் தெருவை சேர்ந்த முருகேசன், 37, என்பவர் பைக்கை திருடியது உறுதியானது. இதையடுத்து, திருச்சியில் திருட்டு பைக்கில் சுற்றிய முருகேசனை போலீசார் நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
13-Mar-2025