மேலும் செய்திகள்
பிரதமர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
19-Sep-2025
ஊட்டி: கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊட்டி அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் 'ஷார்க் ஸ்டார்' ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மூன்றாம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்தது. மாவட்டத்திலிருந்து, 32 கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடினர். போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், அ.தி.மு.க. , மாவட்ட செயலாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். கிளப் வளர்ச்சிக்காக, 20 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செ யலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Sep-2025