மேலும் செய்திகள்
தாலுகா தலைநகரை கவனிக்குமா போக்குவரத்து துறை
19-Apr-2025
பந்தலுார்; பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம், கேரள பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்களின் நேரம் மற்றும் வருகை குறித்து, பயணிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக அரசு போக்குவரத்துத்துறை மூலம், நேரக்காப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த பல மாதங்களாக, பணியிடம் காலியாக உள்ளதால் பயணிகள், பஸ்களின் வருகை மற்றும் நேரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், இங்கு நிறுத்தி குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவதற்கு பதில், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விருப்பம்போல் இயக்கி வருகின்றனர். எனவே, பந்தலுார் பஸ் ஸ்டாண்டில் காலியாக உள்ள நேர காப்பாளர் பணியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
19-Apr-2025