உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்காலிக பாலத்தால் தொல்லை: நிரந்தர பாலம் எப்பேது?

தற்காலிக பாலத்தால் தொல்லை: நிரந்தர பாலம் எப்பேது?

பந்தலுார்:கிராமங்களுக்கு செல்ல நிரந்தரம் பாலம் அமைக்கப்படாததால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரம்பாடி, சப்பந்தோடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு கிராமத்திற்கு செல்லும் பாதையில், பாயும் ஆற்றை கடந்து செல்ல வேண்டும். ஆற்றை கடக்க நிரந்தர பாலம் இல்லாத நிலையில், மரத்திலான தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தற்காலிக பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நிலையில், ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.உடைந்த தற்காலிக பாலத்தில் தள்ளாடும் பயணத்தில்,இரவு நேரத்தில் நிலை தடுமாறி ஆற்றில் விழும் சம்பவங்கள் தொடர்கிறது. எனவே, இப்பகுதி மக்கள் ஆற்றை கடந்து செல்ல, நிரந்தர சிறு பாலம் அமைக்க வேண்டும். என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை