உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் - ஊட்டி சாலையில் லாரி விபத்து; மண் முழுமையாக அகற்றப்படாததால் அடிக்கடி பாதிப்பு

குன்னுார் - ஊட்டி சாலையில் லாரி விபத்து; மண் முழுமையாக அகற்றப்படாததால் அடிக்கடி பாதிப்பு

குன்னுார் ; குன்னுார்- ஊட்டி சாலையில் பாலவாசி அருகே, சாலையில் இருந்த மண் முழுமையாக அகற்றபடாமல் இருப்பதால், தண்ணீர் தேங்கிய இடத்தில் நேற்று லாரி விபத்துக்குள்ளானது.குன்னுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி வாகனங்களில் பழுது ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் மழையால் பல இடங்களிலும் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் முழுமையாக அகற்றாமல், பெயரளவிற்கு அகற்றியுள்ளனர்.குறிப்பாக, பாலவாசி அருகே மண் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளதால், மழைநீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதி சேரும், சகதியாக காணப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கப்பத்தொரைக்கு, கோழி உரம் ஏற்றி வந்த லாரி மண்ணில் சருக்கி விபத்துக்குள்ளானது. அதில், டிரைவர் கருப்புசாமி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.டிரைவர்கள் கூறுகையில், 'வாகனங்களுக்கு சாலை வரி கட்டாயம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி போலீசாரால் அடிக்கடி பல குறைபாடுகளுக்கு அபராதம் விதித்து தொகையை வசூலிக்கின்றனர். ஆனால், சாலையின் பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களில் பழுது ஏற்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. அருவங்காடு உள்ளிட்ட இடங்களில் நடந்த விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மண் சரிவுகள் ஏற்பட்ட இடங்களில், மழை நீர்தேங்கிறது. இப்பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, இப்பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை