உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காடெ ெஹத்தை கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

காடெ ெஹத்தை கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

மஞ்சூர்; ஹிந்துசமய அறநிலைத்துறை கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மஞ்சூர் அருகே உள்ள கீழ் குந்தாவில் படுகரின மக்களின் குல தெய்வமான காடெஹெத்தை அம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கோவில் குந்தை சீமைக்கு உட்பட்ட, 14 கிராமங்களுக்கு சொந்தமானதாக உள்ளது. ஹிந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அறநிலைத்துறை ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில், ராஜேந்திரன் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தீபக், ராஜேந்திரன், தேவராஜன், கென்னடி கிருஷ்ணன் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். பின், அனைவரும் பதவியேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை