காசநோய் ஒழிப்பு திட்டம் ‘ஜோஷ்’ குழு அறிமுகம்
ஊட்டி: ஊட்டியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், ‘ஜோஷ்’ குழு அறிமுக நிகழ்ச்சி நடந்தது. துணை இயக்குனர் கனகராஜ் முன்னிலை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று , ஜோஷ் குழுவை அறிமுகப்படுத்தி பேசியதாவது: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் நீலகிரி முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. இத்திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த ’ஜோஷ்’ குழு அறிமுகப்படுத்தப்பட்டது. இக்குழுவில் தேசிய மாணவர், மை பாரத இயக்கத்தின் தொண்டர்கள் தன்னார்வலர்களாக இணைந்து காச நோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த பணியாற்றி வருகின்றனர். எல்லோருக்கும் சிறந்த மருத்துவ கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்டுகிறது. இதன் மூலம் நீலகிரியை நோயற்ற முன்மாதிரி மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் செயல்பட வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, ஊராட்சி செயலாளர்கள், மைபாரத், தேசிய மாணவர் படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பஷீர் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.