உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை

தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை

பந்தலுார்; நீலகிரி மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு மற்றும் கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அத்திக்குன்னா எஸ்டேட் நிர்வாகம் சார்பில், தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை நடந்தது.பந்தலுார் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 'சில்ட்ரன்' அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் முன்னிலை வகித்தார்.பந்தலலுார் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார், பணியாளர் நிர்மலா ராமநாதன் ஆகியோர் காசநோய் பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்து, பரிசோதனை செய்தனர். அதில், 50 தொழிலாளர்களுக்கு 'எக்ஸ்ரே' எடுக்கப்பட்டு, சளி மாதிரி எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், எஸ்டேட் நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை