உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுருக்கில் சிக்கி சிறுத்தை இறந்த சம்பவத்தில் இருவர் கைது

சுருக்கில் சிக்கி சிறுத்தை இறந்த சம்பவத்தில் இருவர் கைது

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, சுருக்கில் சிக்கி சிறுத்தை பலியான சம்பவத்தில், குற்றவாளிகள் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம், நெடுகுளா பட்டுமுக்கு பகுதியில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டா நிலத்தில், கடந்த, 13ம் தேதி சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது. தகவல்படி, கட்டப்பட்டு வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை இறந்து கிடந்ததை உறுதி செய்தனர். வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், சிறுத்தை அதே பகுதியில் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக, வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், நாரகிரி பகுதியை சேர்ந்த, ஆலன், 57, மற்றும் தங்கராஜ், 62, ஆகியோர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர், கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை