உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 10 கிலோ கஞ்சாவுடன் பஸ்சில் இருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் பஸ்சில் இருவர் கைது

பாலக்காடு: பாலக்காடு அருகே, 10 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், கேரள - தமிழக எல்லையான, பொள்ளாச்சி கோபாலபுரத்தில், வாகன சோதனை நடத்தினர். அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த கேரள அரசு பஸ்சில் பயணியரிடம் சோதனை நடத்தினர். அதில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் எடக்கரை பகுதியைச் சேர்ந்த ஷபீர், 42, வேங்கரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் உண்ணி, 59, ஆகியோரின் பேக்கில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை