உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சா விற்பனை: இருவர் மீது வழக்கு

கஞ்சா விற்பனை: இருவர் மீது வழக்கு

குன்னூர்: குன்னூர் சாமண்ணா பூங்கா பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சாமண்ணா பூங்கா அருகில் நேற்று (நவ.,14) எஸ்.எஸ். ஐ., ஜெயராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் . பைக்கில் வந்த இருவரை விசாரணை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. குன்னூர் அப்பர் பஜார் தெருவை சேர்ந்த சதீஷ், 21, உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !