மேலும் செய்திகள்
கூடுதல் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம்
20-Nov-2024
ஊட்டி; ஊட்டியில் இரண்டு இடங்களில் புதிய பகுதிநேர நியாய விலை கடைகள் திறக்கப்பட்டன.ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில் மேடு மற்றும் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட மந்தாடா ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய பகுதிநேர நியாய விலை கடைகளை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மாநில அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு இடங்களில் பகுதிநேர நியாய விலை கடைகள் மற்றும் நடமாடும் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி, ஊட்டி அருகே கோவில் மேடு, மந்தாடா பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலை கடைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இதன் மூலம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு தொலைதுாரம் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது,'' என்றார் தொடர்ந்து, ஊட்டி தலையாட்டி மந்து நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்தார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Nov-2024