உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பூங்கா

பராமரிப்பில்லாத நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பூங்கா

ஊட்டி: ஊட்டியில் பராமரிப்பில்லாத நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா மதுப் பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , படகு இல்லம் , தொட்டபெட்டா மலை சிகரம் போன்றவை இருந்தாலும் , ஊட்டியின் அழகை ரசிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் சாலையோர பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கடந்த, 2009ம் ஆண்டில் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. சமீப காலமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் விட்டதால் , பூங்கா புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் உடைந்து வீணாகி வருவதுடன் , மாலை நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு , பூங்காவை பொலிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ