சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்
குன்னுார், ;குன்னுார், 12வது வார்டு நடைபாதை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.குன்னுாரில், 12வது வார்டு கிருஷ்ணாபுரத்தில் இருந்து உமரி காட்டேஜ் செல்லும் நடைபாதையோர சுற்றுப்புற பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைபாதை சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த நடைபாதை சீரமைக்காததால், மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள், முதி யவர்கள் தடுமாறி விழுகின்றனர். எனவே, நடைபாதையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.