பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்; அலுவலகம் வருவோர் பாதிப்பு
கோத்தகிரி; கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கோத்தகிரி தாலுகா அலுவலகத்தின் தரைத்தளத்தில் நீதிமன்றம் இயங்குகிறது. இதனால், வருவாய் துறை மற்றும் நீதித்துறை தேவைகளுக்காக நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தவிர, இவ்விரு அலுவலகங்களிலும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அலுவலக வளாகத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பொதுப்பணி துறை சார்பில், 4.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொதுமக்களுக்காக கழிவறை கட்டப்பட்டது. ஆரம்பத்தில், பராமரிப்பு செய்யப்பட்ட நிலையில், தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், அலுவலக தேவைகளுக்காக வந்து செல்வோர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கழிப்பிடத்திற்கு போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி பராமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,