உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகற்றப்படாத மர கிளைகள் :போக்குவரத்துக்கு பாதிப்பு

அகற்றப்படாத மர கிளைகள் :போக்குவரத்துக்கு பாதிப்பு

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விழுந்த மரங்களின் கிளைகள் அகற்றப்படாமல் உள்ளது.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன் மரங்களும் விழுந்தன.குறிப்பாக, 'லெவல் கிராசிங்' அருகே, விழுந்த மரம் வெட்டப்பட்டு அதன் கிளைகள் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே, போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்க சாலையோரம் வைத்துள்ள மர கிளைகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்