உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துார் வாரப்படாத தடுப்பணை; தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்

துார் வாரப்படாத தடுப்பணை; தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்

கோத்தகிரி; கோத்தகிரி இடுக்கரை தடுப்பணை துார்வாராததால், தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுக்கரை மற்றும் அணில் காடு பகுதிகளில், 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம எல்லையில், தடுப்பணை அமைந்துள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர், தடுப்பணையில் சேமித்து வைத்து பிறகு அங்கிருந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, தடுப்பணை துார்வாராததால், காட்டுச் செடிகள் மற்றும் புற்கள் முளைத்து, தடுப்பணையின் ஆழமும், அகலமும் குறைந்துள்ளது.இதனால், மழை நாட்களில் தண்ணீரை சேமிக்க முடியாமல், தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இந்த தண்ணீர் மக்களுடன், வன விலங்குகளுக்கும் பயன்பட்டு வருகிறது. எனவே, சுருங்கியுள்ள தடுப்பணையை துார்வாரி, மழை நாட்களில் தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை