மேலும் செய்திகள்
லட்சுமி நாராயணபுரம் கோவிலில் உறியடி உற்சவ விழா
07-Oct-2025
குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார் உபதலை கிராமத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ண பகவான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத இறுதி சனிக்கிழமை உறியடி உற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டு விழா கடந்த, 11ம் தேதி கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து அகல் விளக்கேற்றி மகளிர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேணுகோபால சுவாமி திருவீதி உலா தொடர்ந்து உறியடி உற்சவம், மகா தீபாராதனை , பிரசாத வினியோகம் நடந்தது. விழாவில் உபதலை சச்சிதானந்த குரு நவீன் சாய், ஆனந்த குரு மேகநாத் சாய் ஆகியோரின் சொற்பொழிவு இடம் பெற்றது.
07-Oct-2025