மத்திய அரசு திட்டங்களை பயன்படுத்துங்கள்; மத்திய பழங்குடியின ஆணைய உறுப்பினர் அறிவுரை
ஊட்டி; நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்தில், தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினர் ஜதோத்து ஹுசைன் நாயக் ஆய்வு செய்தார். பழங்குடியினர் நலன்
அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டார்.தொடர்ந்து, ஜதோத்து ஹுசைன் நாயக் பேசுகையில்,''தேசிய அளவில், 750 பழங்குடியின மக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசு பழங்குடியினர் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை பற்றி பழங்குடியின நிர்வாகிகள் அறிந்து, அதனை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளத்தில் புகார்
குறைகள் ஏதாவது இருந்தால் அதற்கான இணையதளத்தில் புகார் அளிக்கலாம். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ஆய்வில், ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., கணேஷ், கூடுதல் கலெக்டர் கவுசிக், குன்னுார் சப்-- கலெக்டர் சங்கீதா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.