உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீர செயலை கவுரவிக்கும் வீர நாரிஸ் வீர மாதா நிகழ்ச்சி உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

வீர செயலை கவுரவிக்கும் வீர நாரிஸ் வீர மாதா நிகழ்ச்சி உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

குன்னூர்: காலாட்படை தினத்தை முன்னிட்டு, குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1947ம் ஆண்டு அக். 27ல், காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், பாகிஸ்தான் ஆதரவுடன் நுழைந்த எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை ராணுவ வீரர்கள் மீட்டனர். காலாட்படையினரின் இந்த வீர செயலை போற்றும் வகையில் ஆண்டுதோறும், அக்.,27ல் காலாட்படை தின நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், 79வது காலாட்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ பேண்ட் வாத்திய இசை முழங்க, ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். ராணுவ பயிற்சி கல்லூரி பிரிகேடியர் எஸ்.கே. தத்தா, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ், லெப். ஜெனரல் அன்பு (ஓய்வு) மற்றும் பயிற்சி அக்னிவீரர் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மவுன அஞ்சலி செலுத்தினர். போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் இறுதி தியாகத்தை கவுரவிக்கும் வகையில் வீர நாரிஸ் மற்றும் வீர மாதா நிகழ்ச்சி நடந்தது. ராணுவத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் லதா, செண்பகவல்லி, பவித்ரா, புஷ்பலதா, ஈஸ்வரி, பிலோமினா பிரியா ஆகியோருக்கு, காலாட்படை தினத்திற்காக தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இவர்களின் குறைகள் குறித்து உயர் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த ஆண்டு முதல் முறையாக பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ