மேலும் செய்திகள்
சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
15-Dec-2024
குன்னுார், ; குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியில், வீரபாண்டிய கட்டபொம்மனின், 265வது பிறந்தநாள் விழா, வீர சாகச நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியில், கடந்த, 2012ம் ஆண்டு கன்டோன்மென்ட் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டது. அப்பகுதியில், நீலகிரி மக்கள் நீதி மய்யம் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின், 265வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், கட்டபொம்மன் சிலைக்கு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கர்னல் பிரதீப்குமார், மேஜர் முத்துக்குமார், டி.எஸ்.பி., முத்தரசு, இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதில், வஜ்ரம் சிலம்பாட்ட கலை குழு மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம், வாள் வீச்சு, களறி உட்பட பல்வேறு வீர சாகச பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தேசிய அளவில் மாற்றுதிறனாளி போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சரவணன், பாரா ஒலிம்பிக் பிசியோதெரபிஸ்ட் இந்துஜா உட்பட பல்வேறு கலைகளில் சாதித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கங்கப்பட்டது.மக்கள் நீதி மய்யம் தலைவர் வினோத் குமார், செயலாளர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீஷ், சிட்டிசன் பாரம் நிர்வாகி ஜெபரத்தினம், கிளீன் குன்னுார் அமைப்பின் தலைவர் சமந்தா அயனா உட்பட பலர் பேசினர்.விழாவில், 265 மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு வழங்கியதுடன், சற்குரு பள்ளி உட்பட பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டன. ஏற்பாடுகளை கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் கோவர்த்தனன், மக்கள் தொடர்பு அலுவலர் பிரசாத் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
15-Dec-2024