கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று காய்கறி கண்காட்சி
கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று காற்கறி கண்காட்சி துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறதுநீலகிரி மாவட்டத்தின் கோடை விழா, கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று நடக்கும், 13 வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவுக்காக, நுழைவு வாயில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.பூங்காவில் ஜல்லிக்கட்டு மாடு, கிளிகள், புறா, வண்ணத்து பூச்சி மற்றும் சிலம்பு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் நீலகிரியில் விளையும், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், பீன்ஸ் மற்றும் உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் கொண்டு, உருவாக்கப்பட்டு வருகிறது.இது தவிர, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக, இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை கோத்தகிரி நகராட்சி கமிஷனர் இளம்பரிதி ஆய்வு செய்தார்.