உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்புழு உரம் தயாரிப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி

மண்புழு உரம் தயாரிப்பு; விவசாயிகளுக்கு பயிற்சி

கூடலுார்; கூடலுார் ஏழுமுறம் பகுதி விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது கூடலுார், ஏழுமுறம் பகுதியில், தோட்டக்கலை துறை சார்பில், கிராம அளவிலான விவசாயிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமை வகித்து, 'ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புக்கள்; இயற்கை உரங்களை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்; இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்; ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரிப்பு, அதன் பயன்பாடுகள்,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஜீவாமிர்தம், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.கூட்டத்தில், உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் யமுனபிரியா, குழு உறுப்பினர் அனுஸ்ரீ, அஜெஷ், முன்னோடி விவசாயிகள் ஆனந்தன், ரவி, தர்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை